Saturday 19 November 2011

மற்றவர்களின் கருத்துக்களை மதித்தல்

மற்றவர்களின் கருத்துக்களை மதித்தல்
                        குழந்தைகளை தன்னாலே சிந்தித்துப் பேச வெகு சீக்கிரத்தில்    விடுவது நல்லது. அவர்களைப் பேச விடா விட்டால் அவர்களுக்குள் எழும் உணர்வுகள் பிறர் அடக்க முயற்சித்தாலும் எழுவது உறுதி. 
                குழந்தைகளை நண்பர்களாகப்   பாவிக்க விட்டால் வயதான பின் உங்கள் குழந்தைகள் உங்களை விட்டு விலகுவது உறுதி.
           சின்ன வயதில் "படி" என்று சொன்ன காரணத்துக்காக இயற்கை ஆக வரும் உபாதைகளைக் கூட வெளியே சொல்ல முடியாமல் பள்ளியிலோ, வீட்டிலோ குழந்தைகள் தவிக்கலாம்.ஆனால் அதே குழந்தைகள் வயதாகும்போது தனக்கும்   உணர்வுகள் பிறரால் புரிந்துக் கொள்ளப் பட வேண்டும் என நினைப்பது உறுதி.
                ஆனால் அதே குழந்தைகள் உங்களுக்கு வயதாகும்போது, உங்களை விட்டு விலகுவதற்குக்    காரணமாக உங்கள் அடக்குமுறை  இருக்கக் கூடாது.
                                    குழந்தைகளுக்குப் பணம் செலவழிப்பது மட்டும் அன்றி, அவர்களுக்குத் தகுந்த நேரத்தை ஒதுக்கி , அவர்கள் கஷ்ட, நஷ்டம் புரிந்து, அவர்கள் உலகத்தில் நீங்கள் நுழைந்து சந்தோஷத்திலும், துக்கத்திலும், அவர்கள் உணர்வுகள் மதிக்கப் படவில்லை எனில், வயதான பின்னர் அவர்களிடமிருந்து எதையும்    பணம், காலம், அன்பு என எதிர்பார்த்தாலும்   அது கிடைக்காமல் போகலாம்.
                எனவே சுயநலம் மட்டுமல்ல, நான் சொல்லுவது   பொது நலமாகிய ஆரோக்கியமான பிரஜைகள் உருவாக்குவது பெற்றோர்கள் பிறகு ஆசிரியர்கள் கையில் உள்ளது எனச் சொல்லி விட்டு பிறகு மற்றுமொரு பகிர்தலில் சந்திக்கிறேன்.